11 பாக்கெட் குட்கா பறிமுதல்


11 பாக்கெட் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 8 April 2022 2:29 AM IST (Updated: 8 April 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

கொற்றிகோடு அருகே கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 11 பாக்கெட் குட்காவை போலீசாா கைது செய்தனர்.

தக்கலை:
கொற்றிகோடு அருகே முட்டைக்காடு வழிகலம்பாடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கொற்றிக்கோடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலையில் கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை செய்தார். அப்போது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 11 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தார். மேலும், இதுதொடர்பாக கடை உரிமையாளரான வழிக்கலம்பாட்டை சேர்ந்த வியாபாரி கோபி(வயது 67) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story