புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 April 2022 2:57 AM IST (Updated: 8 April 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை டவுன் போலீசார் வடக்கு பிரதானசாலையில் ரோந்து சென்ற போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றதாக பழையபேட்டை சர்தார்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 38) என்பவரை கைது செய்தனர். பாளையங்கோட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள மிலிட்டரி கேன்டீன் அருகே ரோந்து சென்றபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்றதாக பாளையங்கோட்டை ஜெப மாளிகை தெருவை சேர்ந்த இப்ராஹிம் டேனியல் ஆசீர் (49) என்பவரை கைது செய்தனர். மொத்தம் அவர்களிடம் இருந்து 2 கிலோ 76 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story