குற்றாலம் மலையில் காட்டுத்தீ


குற்றாலம் மலையில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 8 April 2022 3:27 AM IST (Updated: 8 April 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் மலையில் காட்டுத்தீ பிடித்தது. இதில் பல அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

தென்காசி:
கடையம் வனச்சரக பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமநதி அணை அருகே மலையில் காட்டுத்தீ பிடித்தது. உடனே வனத்துறையினர் அங்கு சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் நேற்று குற்றாலம் மலைக்கு மேல் பழைய குற்றாலம் பகுதியில் காட்டுத்தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா, கடையம் வனச்சரகர் ராதை உள்ளிட்டோர் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி வனத்துறையினர் 35 பேர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் அங்குள்ள ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 


Next Story