உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா


உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா
x
தினத்தந்தி 8 April 2022 4:30 AM IST (Updated: 8 April 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா நடைபெற்றது.

திருச்சி:

தேர்த்திருவிழா
திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா மற்றும் குட்டி குடித்தல் திருவிழா கடந்த 5-ந் தேதி காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பகலில் சுத்த பூஜையும், அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
தேரானது தென்னூர் காவல்காரன் தெரு, அண்ணாநகர், லட்சுமி நகர், மல்லிகைபுரம் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்றது.
குட்டி குடித்தல் விழா
இந்த நிலையில் நேற்று முக்கிய நிகழ்வாக காவல் தெய்வமான சந்தன கருப்பு குட்டி குடித்தல் விழா, தென்னூர் பிடாரி மந்தையில் திருத்தேர் முன்பு நடைபெற்றது. இதில் ஆட்டுக்குட்டிகளின் குரல்வளையை மருளாளி கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்து, அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குட்டி குடித்தல் விழாவையொட்டி தென்னூர் பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தென்னூரில் பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story