பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பாவுக்கு ஆயுள் தண்டனை


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பாவுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 8 April 2022 4:55 AM IST (Updated: 8 April 2022 4:55 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பாவுக்கு ஆயுள் தண்டனை என்று திரு்சிச மகிளா கோா்ட்டு தீர்ப்பளித்தது.

திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 59). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால் அவரையும், அவருடைய பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பின் பல முறை அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் 2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படித்தபோது, பள்ளியில் கல்தடுக்கி விழுந்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்ததும், அவர் கீழே விழுந்ததில் கரு கலைந்ததும் தெரியவந்தது. இதுபற்றி அவருடைய பெற்றோர் விசாரித்தபோது, மாணவி நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பனுக்கு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடப்பட்டு இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

Next Story