எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ‘உலக சுகாதார தினம்’ கடைபிடிப்பு; நர்சுகள் விழிப்புணர்வு ஊர்வலம்
உலகம் முழுவதும் ஏப்ரல் 7-ந் தேதி ‘உலக சுகாதார தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எழிலரசி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நர்சுகள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி பேசியதாவது:-
‘நமது பூமி, நமது சுகாதாரம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு ‘உலக சுகாதார தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றையும், குப்பைகளை குப்பை தொட்டியில்தான் போட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். முக்கியமாக துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். மரங்களை வெட்டக்கூடாது போன்றவற்றையும் பின்பற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு ஒருங்கினைப்பாளர் கங்காதரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story