திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மை இன்றி வாழ வேண்டும். கலெக்டர் பேச்சு


திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மை இன்றி வாழ வேண்டும். கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 8 April 2022 6:37 PM IST (Updated: 8 April 2022 6:37 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மையின்றி வாழ வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

வேலூர்

திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மையின்றி வாழ வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.

திருநங்கைகள் தினவிழா

ேலூர் கலெக்டர் அலுவலகத்தில்  சர்வதேச திருநங்கைகள் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்‌. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார், சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) கோமதி, கவுன்சிலர் கங்கா ஆகியோர் வாழ்த்தி பேசினர். அதைத்தொடர்ந்து திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

திருநங்கைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டி, உணவு தயாரித்தல், நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சமூக நலத்துறை சார்பில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரத்து 559 சிறுதொழில் செய்ய மானியமும், 45 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

தாழ்வு மனப்பான்மை இன்றி...

திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. அவர்கள் வாழ்வில் முன்னேற தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. திருநங்கைகளை பரிதாபமாக பார்ப்பவர்கள் அறியாமையில் உள்ளனர் என்று கூறலாம். நீங்கள் மனம் தளராமல், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வாழ வேண்டும். உதவிக்குழு அமைத்துக்கொண்டு ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story