கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது


கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2022 8:03 PM IST (Updated: 8 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உத்திரமேரூர் அடுத்த உள்ளம் பாக்கம் அருகே கள்ளச்சாராயம் தயாரிப்பதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உள்ளம்பாக்கம் வயல்வெளியில் கள்ளசாராயம் தயாரித்து கொண்டிருந்தவர்களை விரட்டி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடினர்.

அங்கிருந்த சாராய ஊரல்களை கீழே கொட்டி போலீசார் அழித்தனர். 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட 2 பேரை பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் வயலூர் கூட்ரோட்டை சேர்ந்த தேவன் (வயது 46), அதே பகுதியைச் சேர்ந்த சார்லஸ் (43) என்பது தெரியவந்தது. 2 பேரை கைது செய்த பெருநகர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story