மார்த்தாண்டம் அருகே 1½ வயது குழந்தையை கொன்றது ஏன்? கைதான கொடூர தாய் பரபரப்பு வாக்குமூலம்
மார்த்தாண்டம் அருகே 1½ வயது குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான கொடூர தாய் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே 1½ வயது குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான கொடூர தாய் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குழந்தை கொலை
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). கொத்தனாரான இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி அன்று கார்த்திகா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கருதி தான் பெற்ற குழந்தையான சரணுக்கு சேமியா உப்புமாவில் விஷம் வைத்து கொன்றார். மற்றொரு குழந்தையான சஞ்சனாவுக்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய் கைது; வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகா, தின்பண்டம் என நினைத்து விஷப்பொடியை குழந்தை தின்றதால் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடமும், கணவரிடமும் நாடகமாடினார். ஆனால் கார்த்திகாவின் நாடகம் போலீசாரிடம் எடுபடவில்லை. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் நேற்றுமுன்தினம் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமணத்தை மறைத்து காதல்
எனக்கும், மாராயபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய கலகலப்பான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. இதனால் திருமணமானதை மறைத்து அவருடன் நெருங்கி பழகினேன். பிறகு இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க தொடங்கினோம்.
இதனை பயன்படுத்தி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்தேன். கணவர் வேலைக்கு சென்றதும் குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினரிடம் விட்டு விட்டு அந்த வாலிபரிடம் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தேன். இந்த கள்ளக்காதல் மோகம், என்னை உல்லாச வானில் சிறகடிக்க வைத்தது.
காதலன் விலகினார்
மேலும் இந்த விவகாரம் எனது கணவருக்கு தெரியாமல் பார்த்து கொண்டேன். இந்தநிலையில் தான் எனக்கு திருமணம் ஆன விவரம் காதலனுக்கு தெரியவந்தது. இதன்பிறகு காதலன் என்னை விட்டு விலக தொடங்கினார். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் முன்புபோல் என்னிடம் நெருக்கம் காட்டவில்லை.
ஒரு கட்டத்தில் 2 குழந்தைகள் இருக்கிற உனக்கு, நான் சரிப்பட்டு வர மாட்டேன் என கூறி விட்டார். அதன்பிறகு என்னை கண்டுகொள்ளவில்லை. இது எனக்கு குழந்தைகள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தீர்த்து கட்டினேன்
குழந்தைகளை தீர்த்துக் கட்டி விட்டால், கள்ளக்காதலை மீண்டும் புதுப்பித்து நான் நினைத்தபடி சந்தோசமாக வாழலாம் என்ற எண்ணம் எனக்கு உருவானது. அதன்படி குழந்தைகளுக்கு சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து சரணை கொன்றேன். மற்றொரு குழந்தை சஞ்சனா குறைவாக விஷம் சாப்பிட்டதால் அவள் வெகுநேரம் கழித்து மயங்கி விழுந்தார்.
முதலில் விஷப்பொடியை குழந்தை தவறுதலாக தின்றதால் குழந்தை இறந்திருக்கலாம் என கூறி நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்பு கொண்டேன்.
இவ்வாறு கார்த்திகா வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
சிறையில் அடைப்பு
இதன்பிறகு போலீசார் கைது செய்யப்பட்ட கார்த்திகாவை குழித்துறை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. பின்னர் கார்த்திகா தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story