வன ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
சுருளி அருவி பகுதியில் வன ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கம்பம்:
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு அரிய வகை உயிரினங்களும், காட்டு மரங்களும், சந்தனம், தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட மரங்களும் உள்ளன. யானை, புலி, மான், கரடி அதிகளவில் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.
இந்நிலையில் தற்போது கடும் வெயிலால் வனப்பகுதியில் தீப்பிடித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட வனத்துறை சார்பில், அனைத்து வனச்சரகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சுருளி அருவி பகுதியில் கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வன ஊழியர்களுக்கு, தீ தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தீ அணைப்பது, தீத்தடுப்பு காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள், முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story