தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்


தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்
x
தினத்தந்தி 8 April 2022 10:18 PM IST (Updated: 8 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  பின்னர் உற்சவர் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் 12-ந் தேதி கருடசேவையும், 14-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். 

Next Story