சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 10:48 PM IST (Updated: 8 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்ட சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங் கையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் மாரி தலைமை வகித்தார். கிளை செயலாளர் கருப்பையா வரவேற்றார். மாவட்ட செயலாளர் சின்னப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் சாலைப்பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முத்தையா நன்றி கூறினார். முன்னதாக அலுவலக வாசலில் வாழை கன்றை நட்டு ஆர்பாட்டத்தை தொடங்கினர்.

Next Story