மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி


மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி
x
தினத்தந்தி 8 April 2022 11:15 PM IST (Updated: 8 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலியானார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68), விவசாயி. இவர்  மோட்டார்சைக்கிளில் தென்நந்தியாலத்தில் இருந்து நந்தியாலம் நோக்கி வந்து கெண்டிருந்தார். 

வழியில் தனசேகரன் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே தனசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story