விஷம் குடித்து விவசாயி தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணராயபுரம்,
லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 40), விவசாயி. இவரது மனைவி பிரியா (31). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சண்முகசுந்தரம் குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியா தனது கணவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story