திருவையாறில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா
திருவையாறில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. திருமழப்பாடியில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவையாறு;
திருவையாறில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. திருமழப்பாடியில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
நந்தியம்பெருமான் பிறப்பு விழா
திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நந்நியம்பெருமானை வழிப்பட்டனர். நந்தியம்பெருமாளுக்கு அய்யாறப்பர் அறம்வளர்த்த நாயகி, அம்மாளுடன் காட்சி அளித்தார். நேற்று மாலை அறம்வளர்த்தநாயகி உடனாகிய அய்யாறப்பர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
திருமழப்பாடிக்கு
இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் அய்யாறப்பர் அம்பாள், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழப்பாடிக்கு செல்கிறார்கள்.
திருக்கல்யாணம்
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள் இதை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்வார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story