மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்தது
தினத்தந்தி 9 April 2022 4:10 AM IST (Updated: 9 April 2022 4:10 AM IST)
Text Sizeஅச்சன்புதூர் அருகே மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அச்சன்புதூர்:
செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே உள்ள வடகரை ஜாகிர் உசேன்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, விவசாயி. இவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அருகில் உள்ள திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. வீட்டில் அனைவரும் திண்ணையில் அமர்ந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire