நாமக்கல் கோர்ட்டில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்


நாமக்கல் கோர்ட்டில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 April 2022 5:03 PM IST (Updated: 9 April 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கோர்ட்டில் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சமரச தீர்வு மையத்தில் சமரச தினவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிரேகா தலைமை தாங்கினார். மாவட்ட சிறப்பு நீதிபதி நந்தினி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் நீதிபதிகள், சமரச மைய வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பொதுமக்களுக்கு சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு கை பிரதிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் செய்து இருந்தார்.


Next Story