சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள்


சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள்
x
தினத்தந்தி 9 April 2022 8:25 PM IST (Updated: 9 April 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள மோட்டார் வாகன சூப்பிரண்டு அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள மோட்டார் வாகன சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிராபகரன் தலைமை தாங்கினார். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலைகள் மற்றும் மின்உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்தில் இருந்து தினமும் லாரிகள் மூலம் நிலகரி கொண்டு வரப்படுகிறது. இதில் கும்மிடிப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 250 லாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சில லாரிகளில் வாயிலாக ஆந்திராவில் இருந்து அரசு நிர்ணயம் செய்த எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக நிலக்கரி ஏற்றி வருகின்றனர். இதற்கு ஒரு சில அரசு துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் முறையாக பாரம் ஏற்றி வரும் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 

எனவே அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முறையாக தொழில் செய்திடும் லாரி உரிமையாளர்களின் நலனை காக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story