பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெய வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பரணி குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சுபாஷ், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சதீஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், சித்தார்த், கமலக்கண்ணன், சங்கர், ஒன்றிய நிர்வாகிகள் மாலதி, ராஜேந்திரன், குப்புசாமி, பாலன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷகிலா, வினோதினி, ஜோதி, மகேஸ்வரி, சக்தி, அருள்குமார், ஜெயம், சத்தியநாராயணன், மகேந்திரன், விஷ்ணு, முத்து, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story