சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளர்கள் 30 பேர் படுகாயம்
சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமயபுரம், ஏப்.10-
சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூலி தொழிலாளர்கள்
அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தில் இருந்து திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலைப்பூர் என்ற கிராமத்திற்கு வயல் வேலைக்கு நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை முதுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், வேலை முடிந்த பின்னர் மாலை சுமார் 6 மணிக்கு அதே ஆட்டோவில் செல்ல திட்டமிட்டு ஆட்டோ டிரைவரிடம் வேலை பார்த்த வயல் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற ஆட்டோடிரைவர்கூலித்தொழிலாளர்கள் ஒவ்வொருவராக, ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார்.
30 பேர் படுகாயம்
தொழிலாளர்கள் ஏறிய பின்னர் டிரைவர் ஆட்டோவை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கோவில் எசனை பகுதியை சேர்ந்த சின்னம்மாள் (வயது 55), தனம் (60), புஷ்பம் (60), பாப்பா (50), சந்தோசம் (37), தங்கப்பொண்ணு (55) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story