இரும்பு கம்பம் விழுந்து வாலிபர் காயம்


இரும்பு கம்பம் விழுந்து வாலிபர் காயம்
x

இரும்பு கம்பம் விழுந்து வாலிபர் காயம்

திருச்சி, ஏப்.10-
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தனியார் செல்போன் நிறுவன நெட்வொர்க்கிற்காக இரும்பு கம்பம் நடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான இரும்பு கம்பங்கள் உள்ளன.இந்தநிலையில் நேற்று மாலை மழை பெய்தபோது, உறையூர் பாளையம்பஜார்23-வதுவார்டுக்குட்பட்டசெவந்திபிள்ளையார்கோவில் தெருவில் நடப்பட்டு இருந்த இரும்பு கம்பம் சரிந்து விழுந்தது. இதில் உறையூர் தெற்கு எடத்தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 22) என்ற வாலிபர் காயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள இதுபோன்று இரும்பு கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால் அந்த சரியாக நடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே அந்த கம்பங்கள்  முறையாக நடடப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story