பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்காக நந்தி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டுவரப்பட்டு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடும் நடைபெறும். வருகிற 15-ந் தேதி சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. வருகிற 16-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.
17-ந் தேதி பரிவேட்டை சாமி புறப்பாடும், 18-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. 19-ந் தேதி நடக்கும் நடராஜர் தரிசனம், மஞ்சள் நீர் நிகழ்ச்சிகளுடன் தேர் திருவிழா முடிவடைகிறது.
Related Tags :
Next Story