இறந்தவர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு; பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்
வெள்ளித்திருப்பூர் அருகே இறந்தவர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளித்திருப்பூர் அருகே இறந்தவர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிணத்தை எரிக்க எதிர்ப்பு
அந்தியூர் அருகே கொமராயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவலன் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் தாவிரியான். அவருடைய மனைவி லட்சுமி என்கிற குருவியம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார்.
இதையடுத்து அவரது உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு் நேற்று மதியம் 1 மணிக்கு சென்னம்பட்டி வனப்பகுதி அருகே உள்ள போகியன்தாண்டா என்ற இடத்தில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் குருவியம்மாளின் உறவினர்களிடம், ‘வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் உடலை எரிப்பதால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு பிணத்தை எரிக்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிணத்துடன் சாலை மறியல்
அதேபோல் தனியார் ஒருவரும் தனது நிலத்துக்கு அருகே பிணத்தை புதைக்கக்கூடாது எனக்கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குருவியம்மாளின் உறவினர்கள் உடனே ஆம்புலன்சுடன் வெள்ளித்திருப்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் சாலையில் உள்ள தேவலன்தண்டா பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றனர். பின்னர் பிணத்தை ஆம்புலன்சில் இருந்து இறக்கி நடுரோட்டில் வைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு முத்து, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உடல் அடக்கம்
அப்ே்பாது அதிகாரிகளிடம் மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘தேவலன் தண்டா பகுதி மக்களுக்கு சென்னம்பட்டி வனப்பகுதியையொட்டி உள்ள நிலத்தை மயானமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பிணத்தை எரிக்க அங்கு கொண்டு சென்றோம். இதற்கு வனத்துறையினர் மற்றும் தனியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பிணத்தை வனப்பகுதியையொட்டி உள்ள நிலத்தில் எரிக்க அனுமதிக்க கோரி நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து தேவலன் தண்டா பகுதி மக்களுக்கு மயானம் ஒதுக்கி தரப்படும்’ என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தற்காலிகமாக சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள போகியன் தண்டா பகுதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு் அங்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவரின் உடலை தகனம் செய்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொளத்தூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story