சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா


சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா
x
தினத்தந்தி 10 April 2022 3:25 AM IST (Updated: 10 April 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் வீதிஉலா வந்தனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவில் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு 2-வது நாளன்று இரவில் சுவாமி - அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story