தமிழக வாலிபர் கொலையில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுவது பொய்; பா.ஜனதா குற்றச்சாட்டு
தமிழக வாலிபர் கொலை வழக்கில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பொய் சொல்வதாக பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது.
பெங்களூரு:
இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
உருது மொழி
பெங்களூரு ஜே.ஜே.நகர் அருகே கவுரிபாளையாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வாலிபர் சந்துரு கொலை செய்யப்பட்டார். அவரை முஸ்லிம் வாலிபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதால் சந்துருவுக்கும், முஸ்லிம் வாலிபர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே உருது மொழி பேசும்படி சந்துருவிடம் கூறியுள்ளனர். அவருக்கு உருது மொழி தெரியாது என்று கூறியதால் முஸ்லிம் வாலிபர்கள் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதால் தான் சந்துரு கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுவது பொய்.
உண்மையான காரணம்
பொய்யான தகவல்களை அவர் கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறிய கருத்தே உண்மையானதாகும். சந்துரு கொலை குறித்து விரிவான விசாரணை நடைபெற வேண்டும். அப்போது கொலைக்கான உண்மையான காரணம் வெளியே வரும்.
அர்ச்சகர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக கோவிலில் வேலை செய்வதாக குமாரசாமி கூறி இருப்பது சரியல்ல. அர்ச்சகர்கள் பற்றி குமாரசாமி கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story