மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மினிலாரி மோதி விபத்து
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஏற்றி செல்லும் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி வந்து கொண்டு இருந்தது.
அப்போது மினிலாரி திடீரென நிலை தடுமாறி நின்று கொண்டு இருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
டிரைவர் பலி
இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இதில் உடல் நசுங்கி மினி லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனத்தில் உடல் நசுங்கி கம்பிகளில் இடையே சிக்கிக் கொண்டிருந்த டிரைவரின் உடலை நீண்ட நேரம் போராடி மீட்டனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story