கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராமநவமி
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சாமி கோவிலில் நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை கணேச, நவக்கிரக ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. பின்னர் ஆஞ்சநேயர் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள சீதா சமேத கோதண்டராமசாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது. இதில் சீதா- ராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல ராசு வீதியில் உள்ள ராமர் கோவிலில் ராமநவமியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சீதா ராமர் அருள்பாலித்தனர். இதே போல மாவட்டத்தில் ராம நவமியையொட்டி ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story