105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2022 8:03 PM IST (Updated: 10 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கொண்டு வந்த 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கூடலூர்

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கொண்டு வந்த 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தீவிர வாகன சோதனை

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வந்தது. மேலும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. 

மேலும் நீலகிரி வனப்பகுதியில்,  நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட எல்லைகளில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் எடுத்து வருகிறார்களா? என்று தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடலூர் பகுதியில் உள்ள கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

ரூ.75 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில் கூடலூர் தாலுகா நாடுகாணியில் போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில், 105 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். 

இனி வரும் நாட்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, கேரள மாநிலம் எடக்கரா பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதனால் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றனர்.


Next Story