பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி
ஊட்டி அருகே பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஊட்டி
ஊட்டி அருகே பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள்
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலைப்பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். வார விடுமுறை நாட்களான நேற்று மற்றும் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மோட்டார் படகுகள், அதிவேக படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சவாரியின் போது ரம்மியமான பைக்காரா அணை, அடர்ந்த வனப்பகுதிகளை பார்வையிட்டனர். தற்போது 100 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் 30 அடியாக குறைந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக தடுப்புடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அடிப்பகுதி வரை நடந்து சென்று சவாரி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. இருப்பினும் தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் அதிவேக படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரோஜா பூங்கா
சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் மலைமுகட்டில் நின்றபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.
கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், கள்ளி செடிகள் கண்ணாடி மாளிகை, இலை பூங்கா, அலங்கார செடிகளை பார்வையிட்டனர். இது தவிர ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
மலைரெயில்
இது மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த மலை ரெயிலில் 230 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது.
மலைரெயிலில் பயணிக்கும்போது குகைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகளை மோதிச் செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜினை பார்வையிட்டனர். ரெயில் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோடை சீசன் தொடங்கி உள்ளதால், ஊட்டி சுற்றுலா பயணிகளால் களை கட்டி வருகிறது.
Related Tags :
Next Story