சமரச தீர்வு மைய பெயர் பலகை. மாவட்ட முதன்மை நீதிபதி திறந்துவைத்தா.


சமரச தீர்வு மைய பெயர் பலகை. மாவட்ட முதன்மை நீதிபதி திறந்துவைத்தா.
x
தினத்தந்தி 10 April 2022 9:32 PM IST (Updated: 10 April 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

சமரச தீர்வு மைய பெயர் பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்துவைத்தார்.

வேலூர்

அனைத்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களிலும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் இருதரப்பினரும் அமர்ந்து சமரசமாக பேசி தீர்வு காணும் வகையில் சமரச தீர்வு யைம் செயல்பட்டு வருகின்றன. இந்த மையம் மூலம் ஏராளமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இதற்காக வக்கீல்கள் குழுவும் இயங்கி வருகிறது. சமரச தீர்வு மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறது. அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கான பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். 

இதில், அனைத்து நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சமரச தீர்வு மைய பெயர் பலகையில் சமரச தீர்வு மையம் மூலம் தீர்த்து வைக்கப்படும் பல்வேறு வழக்குகளின் விவரங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் சமரச தீர்வு மையம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

Next Story