யுகாதிப்பெருவிழா


யுகாதிப்பெருவிழா
x
தினத்தந்தி 10 April 2022 10:27 PM IST (Updated: 10 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

யுகாதிப்பெருவிழா

உடுமலை:
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா கவரநாயுடு சமூக நலச்சங்கம் சார்பில்9-ம் ஆண்டு யுகாதிப்பெருவிழா நேற்று உடுமலை அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.விழாவிற்கு சங்கத்தலைவர் அரிமா ஏ.லோகநாதன் தலைமை தாங்கி பேசினார். தலைமையிடத்து செயலாளர் எம்.முருகேசன் வரவேற்று பேசினார். செயலாளர் வி.ராமதுரை ஆண்டறிக்கை படித்தார். சங்க வளர்ச்சி குறித்து சங்க ஆலோசகர் டி.சுப்புராமன் பேசினார்.பொருளாளர் கே.ஜெகநாதன் நிதிநிலை அறிக்கை படித்தார். ஆந்திர மாநிலம் குண்டூரைச்சேர்ந்த தென்னிந்திய காபு-பாலாஜி கமிட்டி தலைவர் தாசரிராமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில்   தமிழ்நாடு அனைத்து நாயுடு ஐக்கிய சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.எம்.வி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு கவர நாயுடுகள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.கிருஷ்ணராஜ் நாயுடு (கோவை), தி நாயுடு கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (திருப்பூர்) ஆடிட்டர் ஜி.முத்துகிருஷ்ணன் நாயுடு, கவரநாயுடு மகாஜன சங்க தலைவர்கள் பி.டி.சி.நாகராஜ் (பழனி), ஆர்.போகநாதன் (பொள்ளாச்சி), ஜி.திருப்பதி (கீரனூர்) உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பரிசுகளை ஆர்.சக்திவேல், எஸ்.கனகலட்சுமி ஆகியோர் வழங்கினர்.விழாவையொட்டி பெண்ட்லி என்னும் வரன் அறிமுக விழாவும் நடந்தது.சங்க துணைச்செயலாளர் வி.சிவக்குமார் நன்றி கூறினார்.
விழாநிகழ்ச்சிகளைகவரநாயுடு சமூக நலச்சங்க இளைஞர் அணி நிர்வாகிகள் ஏ.எல்.சரவணக்குமார், கே.பிரவீன்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கவரநாயுடு சமூக நலச்சங்க நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் கிளைச்சங்கங்களின் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story