அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி


அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி
x
தினத்தந்தி 10 April 2022 10:49 PM IST (Updated: 10 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி நடந்தது.

கோவை

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இவர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவிகளுக்கான 1,500 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் எம்.எஸ்.சி. மாணவி கீர்த்திகா முதலிடம், விலங்கியல் மாணவிகள் விஷ்ணு மாயா 2-ம் இடம், பிரிய தர்ஷிணி 3-ம் இடம் பிடித்தனர்.

 உயரம் தாண்டும் போட்டியில் பி.எஸ்.சி. கணினி மாணவி மனோ பிரியா முதலிடம், பி.பி.ஏ. மாணவி யஷ்வந்தி 2-ம் இடம், விலங்கியல் மாணவி விஷ்ணு மாயா 3-ம் இடம் பிடித்தனர்.

நீளம் தாண்டும் போட்டியில் பி.பி.ஏ. மாணவி யஷ்வந்தி முதலிடம், தாவரவியல் மாணவி சங்கீதா 2-ம் இடம், யுவேதா 3-ம் இடமும் பிடித்தனர். 800 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் வேதியியல் மாணவி ஸ்வேதா முதலிடம், பொருளாதாரம் மாணவி சினேகா 2-ம் இடம் பிடித்தனர்.

 வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி பதக்கங்கள் வழங்கினார். இதில் உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story