உலக சுகாதார தின கருத்தரங்கம்


உலக சுகாதார தின கருத்தரங்கம்
x
தினத்தந்தி 10 April 2022 11:03 PM IST (Updated: 10 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கல்வித்துறை சார்பில் உலக சுகாதார தின கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம், 

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம் கல்வி மாவட்ட அளவில் அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகளின் இளம் செஞ்சிலுவை சங்க ஆலோசகர்களுக்கான உலக சுகாதார தின கருத்தரங்கம் பனங்குப்பத்தில் நடைபெற்றது. கருத்தரங்கை விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழுப்புரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் வட்டார கல்வி அலுவலர் மேரிபுஷ்பசாந்தி, கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, ஜான்டூயி பள்ளிக்குழுமத்தின் நிர்வாக அலுவலர் எமர்சன் ராபின், தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பயிற்றுனர்கள் தண்டபாணி, சின்னப்பன், செஞ்சி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்த கருத்தரங்கின்போது, பள்ளிகளில் சுகாதார பணியில் இளம் செஞ்சிலுவை சங்க ஆலோசகர்களின் முக்கியப்பங்கு, பள்ளிகளில் இளம் செஞ்சிலுவை சங்க அமைப்பினை விரிவுப்படுத்துவது, ரெட்கிராஸ் சின்னங்கள், முதலுதவி, ஜெனீவா ஒப்பந்தம் போன்ற தலைப்புகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் இளம் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ரவீந்திரன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆலோசகர்கள் அன்பழகன், விஸ்வநாதன், கருப்புசாமி, தமிழழகன், பாஸ்கரன், சின்னப்பராஜ், ஹரிபாபு, சரசு, மாலினிதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story