கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
கரூர்,
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் உபவாசம் கடைபிடித்து 40 நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் சி.எஸ்.ஐ. ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் இருந்து குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தோகைமலை சமுதாயக்கூடம் அருகே உள்ள புனித கல்லறையில் தென்னங்குருத்துகளை வைத்து கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி செய்தனர். பின்னர் குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து தேவாலயத்தில் தென்னங்குருத்துகளை சிலுவையாக வடிவமைத்து பங்குகுரு லூயிஸ் பிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story