காளிமலை அம்மன் கோவிலுக்கு புனித யாத்திரை


காளிமலை அம்மன் கோவிலுக்கு  புனித யாத்திரை
x
தினத்தந்தி 11 April 2022 1:17 AM IST (Updated: 11 April 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

காளிமலை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டனர்.

அருமனை:
காளிமலை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள்
புனித யாத்திரை மேற்கொண்டனர்.
பத்துகாணி காளிமலை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் நிர்மால்ய தரிசனம், அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், தேவி மகாத்மிய பாராயணம், அகத்திய முனிவர் முதலான 18 சித்தர்களுக்கும் பூஜை, குங்கும அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலையில் 5 மணிக்கு களியல் முட்டங்காவு பகவதி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. அங்கிருந்து காளிமலைக்கு புனித யாத்திரையும் தொடங்கியது. 
இந்த நிகழ்ச்சிக்கு காளிமலை அறக்கட்டளை துணைத் தலைவர் சிறீகுமார் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் மீனா ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ், சரதவனம் முருகதாஸ் சாமி, மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புனித யாத்திரையை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்.

Next Story