ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி
ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.
செஸ் போட்டி
பிரில்லியன்ட் கிட்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி ஈரோட்டை அடுத்த கதிரம்பட்டியில் உள்ள ஆச்சர்யா சிக்சா மந்திர் இந்து இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கூட முதல்வர் ராவுலா வாராபிரவீன் கலந்துகொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 9 வயதுக்கு உள்பட்டவர்கள், 12 வயதுக்கு உள்பட்டவர்கள், 15 வயதுக்கு உள்பட்டவர்கள் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதேபோல் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் பொது பிரிவு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 400 பேர் பங்கேற்றனர்.
பரிசு
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 115 பரிசு கோப்பைகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளிக்கூட பொது மேலாளர் சத்தியவேலு, ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் அமைப்பின் செயலாளர் ரமேஷ், அகாடமி நிறுவனர் ரூபவாணி, தலைவர் எல்.ராஜா, பள்ளிக்கூட உடற்கல்வி ஆசிரியர்கள் கோவிந்தராஜூ, மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story