பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சாவு
சுரண்டை அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி இறந்தார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 70). இவரது மனைவி களஞ்சியம் (65). இவர் வேலப்பநாடாரூரில் தனது உறவினர் வீட்டு விழாவுக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு செல்வதற்காக வேலப்பநாடாரூர் விலக்கு பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார்.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறுவதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி களஞ்சியம் கீழே விழுந்தார். இதனால் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி களஞ்சியம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பஸ் டிரைவரான ஜெயசீலன் (55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story