மோடி மீண்டும் பிரதமர் ஆவார்
2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று எச்.ராஜா கூறினார்.
நாகர்கோவில்:
2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று எச்.ராஜா கூறினார்.
எச்.ராஜா பேட்டி
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று நாகா்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
மக்கள் மத்தியில் பா.ஜனதா செல்வாக்கு அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெறும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆங்கிலம் பயன்படுத்தும் இடத்தில் இந்தி பயன்படுத்தலாம் என்று தான் கூறினார். தமிழ் பயன்படுத்தும் இடத்தில் இந்தி பயன்படுத்தலாம் என கூறவில்லை.
உண்ணாவிரத போராட்டம்
திராவிடம் என்ற போர்வையில் சிலர் தமிழ் மொழிக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்மொழியை அழித்து வருகிறார்கள். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியது பற்றி தி.மு.க. போராட்டம் நடத்தினால், என்னுடைய முதல் உண்ணாவிரத போராட்டம் வேளச்சேரியில் உள்ள பள்ளியில் இருந்து தொடங்கும்.
தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களை வைத்து கொண்டு தமிழை தவிர அனைத்து மொழிகளையும் கற்று கொடுத்து வருகின்றனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story