இளநீர் பறித்த போது பரிதாபம்: தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


இளநீர் பறித்த போது பரிதாபம்: தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 April 2022 5:24 AM IST (Updated: 11 April 2022 5:24 AM IST)
t-max-icont-min-icon

இளநீர் பறித்த போது பரிதாபம்: தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி.

திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 39). இவரது மனைவி கலைவாணி. மனைவி பிரிந்த நிலையில், கடந்த 4 வருடங்களாக பார்த்தசாரதி தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கூலி வேலை செய்துவரும் இவர் கள்ளிகுப்பம், மேற்கு பாலாஜி நகர், முதல் பிரதான சாலையில் நேற்று சென்ற போது, அங்கிருந்த தென்னை மரத்தை கண்டதும் அங்கு வாடகைக்குக் குடியிருந்த நாகராஜன் என்பவரிடம் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்து தருவதாகவும், அதற்கு ரூ.200 மட்டும் கூலியாக கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மரத்தில் ஏறிய பார்த்தசாரதி தேங்காய்களை பறித்து கீழே போட்ட நிலையில், திடீரென நிலைத்தடுமாறி 30 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை சோதித்து பார்த்த டாக்டர்கள் பார்த்தசாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story