ஆவடியில் சி.ஆர்.பி.எப். சார்பில் ரத்ததான முகாம்


ஆவடியில் சி.ஆர்.பி.எப். சார்பில் ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 11 April 2022 5:27 AM IST (Updated: 11 April 2022 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) சார்பாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், வீர, தீர தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆவடி,

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) சார்பாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், வீர, தீர தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில், சி.ஆர்.பி.எப். வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. தினகரன் ரத்ததான முகாமினை துவங்கி வைத்தார். முகாமில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story