திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம்


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 9:13 PM IST (Updated: 11 April 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்:
 
நத்தம்
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம் நடந்தது. துணை தலைவர் மகேஸ்வரிசரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்புச்சட்டை அணிந்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். பின்னர் சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் பேரூராட்சி அலுவலகம் முன் நகர அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர அவைத்தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் சிவா, கண்ணன், சுமதி செந்தில்குமார், உமாமகேஸ்வரி ராஜாராம், ராதிகா சேகர், பழனிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கன்னிவாடி
கன்னிவாடி பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் தனலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கீதா முருகானந்தம் முன்னிலை வகித்தார். கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் துணைத்தலைவர் உள்பட 11 பேர் கலந்துகொண்டனர். சொத்து வரி உயர்த்துவது பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது இதற்கு 9 பேர் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் மோகன்ராஜ் சொத்துவரி கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தார். அவரும் கவுன்சிலர் மணிமாலதியும்(மா.கம்யூனிஸ்டு) சொத்துவரி உயர்த்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் ஆதரவு அதிகமாக இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகலை தலைமை எழுத்தர் முத்துராமன் வாசித்தார். கூட்ட முடிவில் துணைத்தலைவர் நன்றி கூறினார்.

சித்தையன்கோட்டை
சித்தையன்கோட்டை பேரூராட்சியில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் போதும்பொண்ணு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயமாலு வரவேற்று பேசினார். துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்துவரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, 16-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கோவிந்தசாமி கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். மேலும் அவர் வரிவிதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் சொத்துவரி விதிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பண்ணைக்காடு
பண்ணைக்காடு பேரூராட்சியில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் லதா ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் சொத்துவரி உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துக்குமார், மஞ்சுளாதேவி, கோவைச்செல்வன், கணேஷ் முரளி ஆகியோர் சொத்துவரி உயர்த்தப்படுவதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

அம்மையநாயக்கனூர்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய சொத்துவரி விதிப்பு பற்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைத்தலைவர் விமல்குமார் மற்றும்  கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்பனாதேவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் உமாசுந்தரி வரவேற்றார்.
அய்யம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் ரேகா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். 
சேவுகம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் வனிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கீதா வரவேற்றார். இந்த பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 




Next Story