ஓட்டுக்காக தேவையற்ற கருத்துகளை சித்தராமையா, குமாரசாமி பேசி வருகிறார்கள்


ஓட்டுக்காக தேவையற்ற கருத்துகளை சித்தராமையா, குமாரசாமி பேசி வருகிறார்கள்
x
தினத்தந்தி 11 April 2022 9:33 PM IST (Updated: 11 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்காக தேவையற்ற கருத்துகளை சித்தராமையா, குமாரசாமி பேசி வருகிறார்கள் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு டவுனில் நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி  எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:-

  தார்வாரில் முஸ்லிம் வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றி எதிர்க்கட்சியினர் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் பெங்களூருவில் சந்துரு என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அதுபற்றி யாரும் பேசுவதில்லை. 

சந்துரு கொலை குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சி.ஐ.டி. விசாரணையில் உண்மை வெளிவரும். சந்துரு, ஹர்ஷா ஆகியோரின் கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் பேசாமல் இருப்பது ஏன்?.

 பெங்களூருவில் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டின் மீது தீவைக்கப்பட்டது. அந்த சம்பவத்திலும் பா.ஜனதா தான் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டு வங்கிக்காக சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் தேவையற்ற கருத்தை பேசி வருகிறார்கள்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story