‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 April 2022 9:59 PM IST (Updated: 11 April 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

சமூக விரோதிகளால் பக்தர்கள் அச்சம்
பழனி பெரியப்பா நகரில் இருந்து மானூர் செல்லும் சாலையோரங்களில் இரவில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள் அந்த வழியாக செல்லும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றனர். எனவே போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
-கார்த்திக், பழனி.
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், சீலப்பாடி, உழவர்சந்தை ஆகிய பகுதிகளுக்கு போதிய அளவில் பஸ்கள் இல்லை. இதனால் பஸ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே மேற்கண்ட இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
வீணாகும் குடிநீர் 
பழனி பயணியர் விடுதி பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, பழனி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பழனியில், திண்டுக்கல் சாலையில் உள்ள தேவாலயம் அருகே வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகநாதன், பச்சளநாயக்கன்பட்டி.


Next Story