திருநங்கைகள் காத்திருப்பு போராட்டம்


திருநங்கைகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 10:46 PM IST (Updated: 11 April 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

இலவச மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை
 இலவச மனைப்பட்டா கேட்டு, மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் மகேந்திரன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படவில்லை என்று திருநங்கைகள் குற்றம் சாட்டினர். அதற்கு அதிகாரிகள் தரப்பில், திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story