தேசிய நில அளவை தின புகைப்பட கண்காட்சி


தேசிய நில அளவை தின புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 11 April 2022 10:54 PM IST (Updated: 11 April 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தேசிய நில அளவை தின புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

கோவை

இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என்று அழைக்கப்படும் வில்லியம் லாம்டன் கடந்த 10.4.1802-ம் ஆண்டு சென்னை புனித தோமையர் மலையில் நில அளவை பணிகளை தொடங்கினார்.

 அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி தேசிய நில அளவை தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நில அளவைகள் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. 

இதனை கலெக்டர் சமீரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் கடந்த 1858-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், வரைபடங்களை பெரிதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டாகிராம் கருவி, பரப்பளவை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும் பேரலால் ரூர்ல்ஸ் கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

 இந்த கருவிகளை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி இயக்குனர் தவமணி, ஆய்வாளர்கள் ஆயுப்ஜான், ஆல்ட்ரின் பிரசாத், ஜெயகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் முத்துராஜா உள்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி இன்று (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது.

Next Story