நாட்டை துண்டாட முயற்சிக்கிறார் அமித்ஷா
இந்தி மொழி பொது மொழி என்று கூறி அமித்ஷா நாட்டை துண்டாட முயற்சிக்கிறார் என்று கோவையில் பாதயாத்திரையை தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கோவை
இந்தி மொழி பொது மொழி என்று கூறி அமித்ஷா நாட்டை துண்டாட முயற்சிக்கிறார் என்று கோவையில் பாதயாத்திரையை தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கோவையில் இருந்து பாதயாத்திரை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வற்புறுத்தியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து சென்னை வரை 550 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையினர் நேற்று ஜி.எஸ்.டி. பாதயாத்திரையை தொடங்கினர்.
காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் பொறுப்பாளர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 56 பேர் 18 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த பாதயாத்திரையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டியை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது என்று பா.ஜனதா கூறுகிறது. ஆம் காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் கொண்டு வந்தபோது பா.ஜ.க. அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்தது குறைவான வரி ஒரே வரி.
ஜ.எஸ்.டி. வரி 18 சதவீதற்கு மிகாமல் இருக்க வேண்டும், அதிக வரிவிதிப்பு கூடாது என நிபந்தனைகள் வைத்தோம். நிபந்தனைகளை ஏற்றுகொள்ளவில்லை.
இலங்கையில் இன்றைக்கு என்ன சூழலோ, அந்த சூழல் அன்றைக்கு இந்தியாவுக்கு வந்தது. ஜி.எஸ்.டி.யில் மாற்றத்தை செய்யவேண்டும் என்றுதான் இந்த பாதயாத்திரை செல்கிறோம்.
நாட்டை தூண்டாட முயற்சி
இந்தி தான் பொது மொழியாக இருக்க வேண்டும் எனவும், அலுவல் மொழி எனவும் அமித்ஷா கூறிகிறார். காங்கிரஸ் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. நாம் இந்திக்கு எதிரான இயக்கம் அல்ல. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் உள்ள மக்கள் எந்த மொழியை பேச வேண்டும் நினைக்கிறார்களோ அதையே பேசலாம் என்பதே நமது மொழிக்கொள்கை.
உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா நாட்டை தூண்டாட முயற்சி செய்து வருகிறார். இந்தியாவையும் பாகிஸ்தான் போன்று சிதற விட வேண்டும் என்பதே அவரது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விலை உயர்வு
இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை பின்பற்ற வேண்டும் என அமித்ஷா கூறுகிறார். இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இந்தியா பல மொழிகளின் கூட்டு. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும்.
பா.ஜனதா அடிப்படைவாத கட்சி மொழி விவகாரங்களை கிளப்புகின்றனர். இலங்கை பிரச்சினை வேறு, இந்திய பிரச்சினை வேறு. இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ளது பொருளாதார தட்டுப்பாடு.
ஆட்சி மாற்றம்
மோடி ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றது. அ.தி.மு.க ஆட்சி மக்களால் 10 ஆண்டுகளுக்கு பின்பு தூக்கி ஏறியபட்டது போல, மத்தியிலும் மாற்றம் 10 ஆண்டுகளுக்கு பின்பு வரும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், கேரள காங்கிரஸ் பிரமுகர் சனல், வீனஸ்மணி, மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், சரவணகுமார், கணபதி சிவக்குமார், பச்சைமுத்து, கோவை போஸ், இருகூர் சுப்பிரமணியம், விஜயகுமார், சி.புருசோத்தமன், செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story