தண்ணீர் தொட்டி தேடி வந்த காட்டு யானைகள்
துடியலூர் அருகே தாகம் தணிக்க தண்ணீர் தொட்டியை தேடி காட்டு யானைகள் வந்தன.
துடியலூர்
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தடாகம், ஆனைகட்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியைவிட்டு வெளியேறும் நிலை உள்ளது. இதனைதடுக்க வனத்துறை சார்பில் மலையையொட்டி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நெம்பர் 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கரை கீழ்பதி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை தேடி நேற்று 2 குட்டிகளுன் 3 காட்டு யானைகள் தாகம் தணிக்க வந்தன.
பின்னர் அந்த காட்டு யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அங்கே நின்றுவிட்டு பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
Related Tags :
Next Story