திண்டிவனம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
திண்டிவனம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது நொளம்பூர் ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து, விசாரித்தனர். அதில், அவர் நொளம்பூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சிவா மகன் அன்பழகன் (வயது22) என்பதும், அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து, அன்பழகனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story