அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு


அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 April 2022 11:25 PM IST (Updated: 11 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா சாப்பரம் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருத்தமரம்பட்டியை சேர்ந்த அபிமன்னன் (வயது 44) அறங்காவலராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்ற போது கோவிலில் சாமிக்கு அணிவிப்பதற்காக வைத்திருந்த ரூ.1000 மதிப்புள்ள கவரிங் ஆபரணங்கள், உண்டியல் பணம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அபிமன்னன் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story