கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை களை விற்பனை செய்த மருந்துக்கடை ஊழியர் கைது செய்யப் பட்டார்


கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை களை விற்பனை செய்த மருந்துக்கடை ஊழியர் கைது செய்யப் பட்டார்
x
தினத்தந்தி 12 April 2022 7:15 PM IST (Updated: 12 April 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை களை விற்பனை செய்த மருந்துக்கடை ஊழியர் கைது செய்யப் பட்டார்


கணபதி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை களை விற்பனை செய்த மருந்துக்கடை ஊழியர் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 7 கிலோ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதை மாத்திரை விற்பனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வருகிறார்கள். 

மருந்துக்கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

 ஆனால் அதை மீறி போதைக்காக வலி நிவாரணி விற்பனை செய்யும் மருந்துக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மருந்துக்கடை ஊழியர் கைது

இந்த நிலையில் கோவை சத்திரோடு ஆம்னி பஸ் நிலைய பகுதியில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செங்கோல்நாதன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்த, கணபதி சுபாஷ்நகரை சேர்ந்த மருந்துக்கடை ஊழியர் தனசேகரன் (வயது28) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்த னர். 

அவரிடம் இருந்து 35 பெட்டிகளில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 கிலோ எடையுள்ள டைக்ளோ மைன், ட்ரமடோல், அசிடாமைனோபென், பியூவோன் ஆகிய மாத்தி ரைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது

கூடுதல் விலைக்கு விற்பனை

கோவை கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள மருந்துக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தேன். 


கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

அப்போது, நான் வேலை பார்க்கும் மருந்துக்கடைக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிச்சென்றனர்.

அதிக பணம் தருவதாக வாலிபர்கள் கூறியதால், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றேன். ரூ.10 மதிப்பிலான மாத்திரைகளை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து வந்தேன். 

அதிக பணம் சம்பாதித்து வந்த நிலையில் போலீசில் சிக்கி விட்டேன். இவ்வாறு தனசேகரன் கூறினார்.

கடை மூடல்

இதையடுத்து மருந்துக்கடை ஊழியர் வேலை பார்த்த கடையை மூட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். 

அதன்படி கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் தனசேகரன் வேலை செய்து வந்த மருந்துக்கடை மூடப்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது

இளைஞர்கள் போதை மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலமாக உடலில் செலுத்திக்கொள்கின்றனர். அதில் அவர்களுக்கு அதிக போதை கிடைக்கிறது. 

போதை ஊசி செலுத்துவதால் வாசனை வராது என்பதால் இதனை பயன்படுத்தியவர்களை கண்டுபிடிப்பது கடினம். 
கண்காணிக்க வேண்டும்

போதை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மூளைத்திறன் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு, இதய கோளாறு, நரம்பு தளர்ச்சி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 More update

Next Story